search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக ஆளுநர்"

    • நிகழ்ச்சி தொடங்கியதும், மாணவ- மாணவியர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர்.
    • தடுத்து நிறுத்தி, தேசிய கீதத்தை பாட வைக்கப்பட்டுள்ளனர்.

    மதுரையில் 'யங் இந்தியன்ஸ்' அமைப்பு சார்பில் இன்று நிகழ்ச்சி நடந்தது. இதில், ஆளுநர் ரவி கலந்து கொண்டார். நிகழ்ச்சி தொடங்கியதும், மாணவ- மாணவியர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர்.

    அப்போது, திடீரென அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். பின்னர், தேசிய கீதத்தை பாட வைக்கப்பட்டுள்ளனர்.

    அதன் பிறகே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஏற்கனவே, ஆளுநர் ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தில் 'திராவிடம்' என்ற வார்த்தை விடுபட்டது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

    தற்போது மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாதியில் நிறுத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.


    • திட்டமிட்ட பழிவாங்கும் போக்கை ஆளுநர் கைவிட வேண்டும்.
    • துணைவேந்தர் மீதான பணியிடை நீக்கத்தைத் திரும்பப் பெற வேண்டும்.

    தஞ்சை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், துணை பேராசிரியர், உதவி பேராசிரியர் என 40 பணியிடங்களை நிரப்ப பணம் வாங்கியதாக புகார் எழுந்ததை அடுத்து, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வி.திருவள்ளுவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், இந்த நடவடிக்கை ஆளுநரின் பழிவாங்கும் செயல் என்றும் துணைவேந்தர் மீதான பணியிடை நீக்கத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் பணி ஓய்வு பெறுவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் ( டிசம்பர்12), திடுமென அவரைப் பணியிடை நீக்கம் செய்து ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் நடவடிக்கை எடுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

    2017 - 2018ம் ஆண்டில் நடந்த நாற்பது பேருக்கான பேராசிரியர் பணிநியமனங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்த புகாரையடுத்து, நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றாலும், அவர்களின் "தகுதிகாண் பருவம்" நிறைவடைந்த நிலையில் ஆட்சிமன்றக் குழுவின் (சிண்டிகேட்) ஒப்புதலுடன் அவர்களுக்கான பணிநிரந்தர ஆணையை வழங்கியுள்ளார்.

    நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது என்னும் நிபந்தனையுடன் தான் இந்த ஆணையை அவர் வழங்கியுள்ளார். இந்த பணிநிரந்தர நடவடிக்கைக்கு எதிராகவே ஆளுநர் துணைவேந்தரைப் பணியிடை நீக்கம் செய்திருக்கிறார்.

    பணிநியமனத்துற்கும் தற்போதைய துணைவேந்தருக்கும் தொடர்பில்லை. தகுதிகாண் பருவம் நிறைவடைந்த நிலையில் ஆட்சிமன்றக் குழுவின் முழுமையான ஒப்புதலுடன்தான் பணிநிரந்தரம் செய்துள்ளார். அதுவும் நீதிமன்றத் தீர்ப்பு வரும்போது அதற்கேறப பணிநிரந்தர ஆணை மீளாய்வுக்குட்படுத்தப்படும் என்கிற நிபந்தனையுடன்தான் அவ்வாணையை வழங்கியுள்ளார்.

    இந்நிலையில், ஆட்சிமன்றக் குழுவின்ஒப்புதலைப் பெறாத ஒரு விசாரணைக்குழுவின் அறிக்கைக்கு ஆளுநர் கோரிய விளக்கம் அளிக்கவில்லை என்று அவர்மீது குற்றஞ்சாட்டி நடவடிக்கை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

    ஆளுநர் அவர்களின் இந்த நடவடிக்கை திட்டமிட்ட உள்நோக்கத்துடன் கூடிய பழிவாங்கும் நடவடிக்கையே ஆகும்.

    முனைவர் திருவள்ளுவன் அவர்கள் பல்கலைக் கழகத்தில் இயங்கும் சில சாதியவாத ஆதிக்க சக்திகளின் அச்சுறுத்தலுக்குப் பணியாமல் நேர்மைத் திறத்தோடு துணிவாக தனது கடமைகளை ஆற்றினார் என்பதும்; திராவிட இலக்கியங்கள் மற்றும் பொதுவுடைமை சிந்தனைகள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து, பல்வேறு நிகழ்வுகளைப் பல்கலைக் கழக வளாகத்தில் ஒருங்கிணைத்தார் என்பதும்; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கொண்டு காணொளி வழியாக (வீடியோ கான்ஃபரன்ஸ்), பொதுவுடைமை 'கவிஞர் தமிழ்ஒளி' அவர்களின் திருவுருவச் சிலையைத் திறந்து வைத்ததுடன், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைப் பாராட்டி நன்றி தெரிவித்தார் என்பதும்; ஆளுநரின் விருப்பறிந்து துணைவேந்தர் இயங்கவில்லை என்பதும் தான் இந்த பழிவாங்கும் நடவடிக்கைக்குக் காரணமெனத் தெரியவருகிறது.

    திராவிட அரசியலுக்கும் திமுக அரசுக்கும் ஆதரவாகவே துணைவேந்தர் செயல்படுகிறார் என அவருக்கு எதிரான சக்திகள் தொடர்ந்து கோள்மூட்டியதையடுத்து, ஆளுநர் அவர்கள் ஆத்திரம் கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். எனவே, இத்தகைய பழிவாங்கும் போக்கை கைவிட்டு, துணைவேந்தர் மீதான நடவடிக்கையை அவர் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    • விக்னேஷ் மீத 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜி என்பவரை சிகிச்சை பெற்று வந்த பெண்ணின் மகன் விக்னேஷ் கத்தியால் குத்திய சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்ட விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஆளுநர் ஆர்.என். ரவி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    டாக்டர். பாலாஜி ஜெகநாதன் மீதான தாக்குதல் அதிர்ச்சியளிப்பதுடன் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மருத்துவர்களுக்கு எதிரான எந்தவொரு வன்முறையும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

    மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையினரின் பாதுகாப்பை, குறிப்பாக மருத்துவமனைகளில் உறுதிப்படுத்த அவசர மற்றும் உடனடி நடவடிக்கைகள் அவசியம். மருத்துவர் பாலாஜி விரைவாக உடல்நலம் பெற வேண்டிக் கொள்கிறேன்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு உயிரிழந்தார்.
    • டெல்லி கணேஷின் மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

    பிரபல நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 80 வயதான நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு உயிரிழந்தார்.

    டெல்லி கணேஷின் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலர் நேரிலும், சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், டெல்லி கணேஷின் மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    டெல்லி கணேஷ் அவர்கள், தனது ஒப்பற்ற பன்முகத் திறமையால், எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து, எல்லைகளைக் கடந்து சினிமா மற்றும் நாடக உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர். நிரப்ப முடியாத அளவுக்கு அவரது மறைவு மிகவும் கடினமான வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும் அபிமானிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • ஆளும் அரசின் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருகிறார்.
    • ஆளுநர் விரைவில் மாற்றப்பட இருப்பதாக தகவல்.

    தமிழ் நாடு மாநில ஆளுநராக கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஆர்.என். ரவி பணியாற்றி வருகிறார். அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை தெரிவிப்பது, அரசு ஆவணங்களுக்கு பதில் அளிக்க காலதாமதம் செய்வது என ஆளும் அரசின் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருகிறார்.

    சமீபத்தில் நடைபெற்ற இந்தி மாத கொண்டாட்ட விழாவில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடலில் மாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில், தமிழகத்திற்கான ஆளுநர் விரைவில் மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    மேலும், ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பதிலாக தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக வி.கே. சிங் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ஏராளமான தேர்தல்களில் மேலிட பொறுப்பாளராக பணியாற்றியவர், முன்னாள் மத்திய அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் வி.கே. சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் 'ஹிந்தி மாத' நிகழ்ச்சி இன்று பிற்பகலில் கொண்டாடப்பட்டது.
    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

    சென்னையில் உள்ள டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் 'ஹிந்தி மாத' நிகழ்ச்சி இன்று பிற்பகலில் கொண்டாடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி இடம்பெறாமல் விடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தனது கண்டனத்தை பதிவு செய்து இருந்தார்.

    இதுகுறித்து கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், " ஆர்.என்.ரவி ஆளுனரா? ஆரியநரா?" என்று கேள்வி எழுப்பினார்.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கருத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதிலடி அளித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    இனவாத கருத்துக்கள், தவறான குற்றச்சாட்டுகளை அவசரகாதியில் முதலமைச்சர் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் இருக்கிறேன்.

    முதல்வர் வெளியிட்ட வருத்தமளிக்கக் கூடிய பதிவு ஒன்றில், எனக்கு எதிராக இனவாத கருத்தைத் தெரிவித்துள்ளார். தமிழ்த்தாள் வாழ்த்துக்கு நான் அவமரியாதை இழைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

    ஒவ்வொரு விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பாடுவேன் என்பது அவருக்கு தெரியும்.

    சமீபத்தில் கூட வடகிழக்கு மாநிலத்தில் அசாம் அரசின் ஒத்துழைப்புடன் கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டய படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

    ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாத கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது. முதலமைச்சரின் உயர் அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் உள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தனது கண்டனத்தை பதிவு செய்து இருந்தார்.
    • எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் கண்டனங்களை பதிவு செய்து இருந்தனர்.

    சென்னையில் உள்ள டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் 'ஹிந்தி மாத' நிகழ்ச்சி இன்று பிற்பகலில் கொண்டாடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி இடம்பெறாமல் விடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தனது கண்டனத்தை பதிவு செய்து இருந்தார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் கண்டனங்களை பதிவு செய்து இருந்தனர்.

    இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்தில் ஏற்பட்ட குளறுபடிக்கு மன்னிப்பு கேட்பதாக டிடி தமிழ் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக டிடி தமிழ் தொலைக்காட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்த்தாய் வாழ்த்து குளறுபடி விவகாரத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்க வேண்டும் என்ற எந்த நோக்கமும் இல்லை. அசாதாரண சூழலை ஏற்படுத்தியதற்காக கவர்னரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தார்.
    • மனுவை மீண்டும் பரிசீலிக்க நீதிபதிகள் உத்தரவு

    கொலை வழக்கில் ஆயுள் தண்டணை கைதியாக புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வீரபாரதி என்பவர் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தார்.

    அதில், முன்கூட்டியே விடுவிக்கும் அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்துள்ளார் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த வழக்கு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

    அப்போது, "அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர். ஆளுநர் அதனை மீற முடியாது" உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பட்டுள்ளது.

    மேலும், மனுவை மீண்டும் பரிசீலிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    • மங்களகரமான சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையில், அனைவருக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துகள்!
    • சரஸ்வதி தேவி நம் அனைவருக்கும் செழிப்பையும் மகிழ்ச்சியையும் வழங்குவாள்.

    ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை சுப தினத்தில் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்!

    சரஸ்வதி தேவி நம் பாதையை தனது கலைத்திறன் மற்றும் ஆழ்ந்த ஞானத்தால் ஒளிரச் செய்து, அறியாமை இருளை அகற்றி, நம் அனைவருக்கும் வளத்தையும் மகிழ்ச்சியையும் வழங்கட்டும்.

    இந்த ஆயுத பூஜை நமக்கு மிகச் சிறந்த புதுமை மற்றும் மீள்திறன் உலகை வடிவமைக்கத் தேவையான சிறந்த படைப்பாற்றல் மற்றும் திறன்களை உரித்தாக்கட்டும். ஒரே குடும்பமாக நாம் இணைந்து, 2047ஆம் ஆண்டுக்குள் அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் முழுமையாக வளர்ந்த இந்தியாவை உருவாக்குவோம் என்று தெரிவித்துள்ளார்.

    • மூத்த அமைச்சர்கள் சிலருக்கு இலாகா மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
    • புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நாளை அல்லது நாளை மறுதினம் நடத்தவும் திட்டம் என தகவல் வெளியானது.

    தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

    ஜாமினில் வெளிவந்துள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் வழங்கப்படுமா ? என்பது குறித்தும் நாளைய அறிவிப்பில் வெளியாக வாயப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    மூத்த அமைச்சர்கள் சிலருக்கு இலாகா மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நாளை அல்லது நாளை மறுதினம் நடத்தவும் திட்டம் என தகவல் வெளியானது.

    இந்நிலையில், தமிழக அமைச்சரவை மாற்றத்திற்கான கடிதம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதன்படி, அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு இன்று இரவு அல்லது நாளை வெளியாக வாய்ப்புள்ளது.

    ஆளுநர் சென்னை திரும்பியதும் கடிதம் குறித்து ஆளுநர் பரிந்துரைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.

    அதனால், இரவு 8.30 மணிக்கு சென்னை திரும்பும் ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சரவை மாற்றம் தொடர்பான கடிதம் குறித்து பரிசீலிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • சென்னை தேனாம்பேட்டை காமராஜனர் அரங்கில் வைகோ பேட்டி அளித்தார்.
    • மதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தால் அது குறித்து யோசிப்போம்.

    தமிழ்நாட்டில் உள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி போல் தமிழ்நாட்டில் தற்குறி யாரும் இல்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காட்டமாக தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் PhD படிப்பில் தரம் இல்லை என ஆளுநர் ரவி கூறியது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதில் அளித்துள்ளார்.

    சென்னை தேனாம்பேட்டை காமராஜனர் அரங்கில் வைகோ பேட்டி அளித்தார்.

    அப்போது மேலும் அவர் கூறியதாவது:-

    தினமும் எதையாவது உளறுகிறார் ஆளுநர் ரவி.. இதைப்போல் மோசமான ஆளுநர் எந்த மாநிலத்திலும் இருந்ததில்லை. ஆர்.என்.ரவியை போல தற்குறி யாரும் கிடையாது.

    முன்னாள் ஆளுநரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம். இந்த ஆளுநரை எதிர்த்து போராட்டம் நடத்துவோம்.

    திமுகவுக்கு மதிமுக எப்போதும் உறுதுணையாக இருக்கும். மது ஒழிப்பு போராட்டத்தை மதிமுகவை போல் மற்ற எந்த கட்சிகளும் நடத்தியதில்லை.

    ஜனநாயகத்தில் கருத்து சொல்வதற்கு இடம் உண்டு என்ற வகையில் திருமாவளவன் கருத்து கூறியிருக்கிறார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க மதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தால் அது குறித்து யோசிப்போம்.

    கோவை அன்னபூர்ணா உணவக உரிமையாளர் அவமதிக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.

    முதலீடுகள் ஈர்ப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை குற்றம்சாட்டுகின்றனர். ஈர்க்கப்பட்ட முதலீடு குறித்து முதலமைச்சர் தெளிவாக கூறிவிட்டார். வெள்ளை, மஞ்சள் அறிக்கை தேவையில்லாதது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கோவையில் நடைபெற்ற கருத்தரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்துகளை தெரிவித்தார்.
    • விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகங்கள், மறைக்கப்படும் மறுக்கப்பட்டும் வருகிறது.

    தமிழக பாடத்திட்டத்தில் தேசிய விடுதலை இயக்கங்கள் பற்றிய பாடங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டி உள்ளார்.

    கோவையில் நடைபெற்ற கருத்தரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

    பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் பற்றிய மிகைப்படுத்துதலும், திராவிட இயக்கங்கள் குறித்த பாடங்களும் தான் உள்ளது.

    நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் நீத்த ஆயிரக்கணக்கான விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகங்கள், மறைக்கப்படும் மறுக்கப்பட்டும் வருகிறது.

    கல்வி அமைப்பை சீர் செய்வதற்கு, மார்க்சிய சிந்தனை உள்பட பல சிந்தனைகள் தடையாக உள்ளன.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×